கொரானா தொற்றால் இறந்த தனது பாட்டிக்கு ஆகாயத்திலிருந்து அஞ்சலி செலுத்திய பாடகி!

Date:

கனேடிய பாடகியான எமிலி மூர் 2020 ஆண்டு கொரானா தொற்றால் இறந்த தனது பாட்டிக்காக ஏர் பலூனிலிருந்து பாடல் பாடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பாட்டி மரணம்

கனேடிய பாடகியும், பாடலாசிரியருமான எமில் மூரின் (Emilee Moore) பாட்டி ஷெர்லி லிரா கடந்த 2020 ஆம் ஆண்டு கொரானா தொற்றால் மரணமடைந்துள்ளார். வட அமெரிக்காவில் தொற்றால் பாதிக்கப்பட்டு முதலில் இறந்தவர்களில் தனது பாட்டியும் ஒருவர் என அவர் கூறியுள்ளார்.

”அவர் சிறந்த சிக்கன் நூடுல்ஸ் சூப் செய்து தருவார், மேலும் மிகவும் மகிழ்ச்சியான பெண், அது மட்டுமில்லாது எப்போதும் மற்றவர்களிடம் கருணை காட்ட நேரம் ஒதுக்கியவர்” என தனது பாட்டியைப் பற்றி எமிலி மூர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மூர் டிஸ்னி பிக்சர் திரைப்படம் ஒன்றிற்கு “மேரீட் லைப் (Married Life)” என்ற பாடலின் வரிகளை எழுதியுள்ளார். அத்திரைப்படத்தின் கதையின் படி கதாநாயகன் கார்ல் தனது மனைவி எல்லியை முதன் முதலில் சந்திக்கிறார். பார்வையாளர்கள் எல்லியின் மரணம் வரை அவர்களின் வாழ்க்கை தொகுப்பைப் பார்க்கிறார்கள்.

இப்பாடலை எழுதிய எமிலி மூர் ”மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நான் எழுதிய பாடல்” எனக் கூறியுள்ளார்.

ஆகாயத்திலிருந்து பாடிய பாடல்

அவரது பாட்டிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இப்பாடலை Tik Tok இல் வெளியிட்ட பிறகு, அந்த காணொளியை 2.5 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

மற்ற படைப்பாளிகளும் பாட்டிக்கு அஞ்சலி செலுத்தி, மொத்தமாக 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளனர் என்று மூர் கூறியுள்ளார். எமிலி மூர் கடந்த செப்டம்பர் 2022ல் கலிபோர்னியாவில் ஒரு ஹாட் ஏர் பலூன் சவாரியின் போது தனது பாட்டிற்கு அஞ்சலி செலுத்துவதாகக் கூறி அதே பாடலைப் பாடி அதனை வீடியோ எடுத்துள்ளார்.

கொரானா தொற்றில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் பாடிய பாடலும், வீடியோவும் இருப்பதால் அந்த வீடியோ பல மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...