கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 235 ரன்கள் குவிப்பு

Date:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்துள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே களத்தில் இறங்கினர்.

இருவரும் வழக்கமான அதிரடி ஆட்டத்தை தொடர்ந்ததால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 20 பந்துகளில் 3 சிக்சர் 2 பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்து ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். இதையடுத்து டெவோன் கான்வேயுடன் இணைந்த அஜிங்யா ரஹானேவும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர்.

கடந்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக அரைச்சதம் அடித்த டெவோன் கான்வே இந்த போட்டியிலும் சதம்அடித்து அசத்தினார். 40 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்சர் மற்றும் 4 பவுண்டரியுடன் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்துவந்த ஷிவம் துபே 5 சிக்சர் 2 பவுண்டரியுடன் அதிரடியா 21 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். டெஸ்ட் பேட்ஸ்மேன் என பெயர்பெற்ற அஜிங்யா ரஹானே இன்றைய ஆட்டத்தில் வெளுத்து வாங்கி ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

29 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 71 ரன்கள் குவித்தார். ஜடேஜா 18 ரன்களும், தோனி 2 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 235 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“குட் பேட் அக்லி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

விடாமுயற்சியை அடுத்து நடிகர் அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்...

தகாத உறவை கண்டித்தால் சிக்கன் ரைஸில் விஷம்

நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (வயது 32) என்பவர் ஓட்டல்...

டி20 உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

ஐ.சி.சி.-யின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்க...

ஸ்டார்க் வேகத்தில் வீழ்ந்த மும்பை- 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா...