ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது இலங்கை

Date:

ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையில் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று 2-வது போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய ஜிம்பாப்வே 44.4 ஓவரில் 208 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் கிரேக் எர்வின் அதிகபட்சமாக 82 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் தீக்சனா 4 விக்கெட் சாய்த்தார்.

பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் இலங்கை அணி வெற்றிக்காக கடைசி வரை போராட வேண்டியிருந்தது. ஜனித் லியனகே 95 ரன்கள் அடிக்க 49 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3-வது மற்றும் கடைசி போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதில் இலங்கை வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் காஸ்பர் ரூட்

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர்...

ஐ.பி.எல். தொடரில் 200 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த சாஹல்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்,...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...

சதம் விளாசிய ஜெய்ஸ்வால்- 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள்...