புன்னாக கவுரி விரத பூஜை

Date:

கவுரி பூஜை என்றால் சிவனுடன் கூடிய பார்வதி தேவியை பூஜை செய்தல் என்று அர்த்தமாகும். வைகாசி மாதம் வளர்பிறை பிரதமை திதியன்று அனுஷ்டிக்கும் கவுரி விரதத்துக்கு புன்னாக கவுரி விரதம் எனப் பெயர். இன்று (சனிக்கிழமை) புன்னாக கவுரி பூஜை தினமாகும். இந்த கவுரி பூஜை செய்யும் சுமங்கலிப் பெண்கள் இன்று மாலை சூரியன் அஸ்தமனத்துக்குப்பின் சுமார் 6.30 மணிமுதல் 8.30 மணிக்குள் கவுரி பூஜையைச் செய்ய வேண்டும்.

புன்னைமரத்தடியில் அல்லது புன்னை மரப்பூக்கள் மற்றும் இலைகளின் மீது சிவனும் பார்வதியும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் விக்ரகம் (அ) படத்தை கிழக்குதிசை நோக்கி வைத்து கொள்ள வேண்டும். அம்மனுக்கு வலப்புறம் நெய்தீபமும், இடப்புறம் நல்லெண்ணை தீபமும் ஏற்றிவைக்க வேண்டும்.

அம்மனுக்கு நேரே அமர்ந்து கொண்டு கவுரியை (பார்வதியை) புன்னைமரப் பூக்களாலோ, இலைகளாலோ அர்ச்சித்து வழிபட வேண்டும். மாதுளம் பழமும், தேனும் நிவேதனம் செய்ய வேண்டும். பக்தியுடன் பூஜை செய்ய வேண்டும். பூஜையின் முடிவில் கவுரியை கைகூப்பி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

இன்று மாலை அருகிலுள்ள சிவன் ஆலயம் சென்று தரிசனம் செய்ய வேண்டும். இந்த புன்னாக கவுரி விரதத்தை மற்றும் பூஜையையும் முறையாகச் செய்யும் குடும்பத்தில் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அன்புடனும், பாசத்துடனும் இருப்பார்கள். மனதிலுள்ள காம குரோதங்கள் விலகி மனதில் அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...