புலம்பெயர்வோர் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஜேர்மனி

Date:

இந்த ஆண்டின் (2023) முதல் நான்கு மாதங்களில், ஜேர்மனியில் சுமார் 101,981 புகலிட விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டில் (2022) ஏறக்குறைய 218,000 புகலிட விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது 2015-2016-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பதிவு செய்யப்பட அதிக எண்ணிக்கையாகும்.

இதற்கு காரணம், போரினால் பாதிக்கப்பட்ட சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். அதைத் தொடர்ந்து துருக்கி மற்றும் ஈராக்கிலிருந்து ஏராளமானோர் ஜேர்மனிக்கு வந்துள்ளனர்.

மேலும், ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக உக்ரைன் நாட்டிலிருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஜேர்மனிக்கு வந்துள்ளனர்.

புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட நடவடிக்கைகளில், புகலிட கோரிக்கை விண்ணப்பங்களின் செயலாக்கத்தை விரைவுபடுத்த உதவும் வகையில், IT அமைப்புகள் நவீனமயமாக்கப்படவுள்ளது. இதற்கு சராசரியாக 26 மாதங்கள் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தகுதியற்ற அல்லது தோல்வியுற்ற விண்ணப்பதாரர்கள் விரைவில் நாடுகடத்தப்படவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

புலம்பெயர்ந்தோருக்கான அதிகபட்ச தடுப்புக் காலத்தை 10 முதல் 28 நாட்கள் வரை நீட்டிக்கப்படுகிறது.

புதிதாக வருகை தந்துள்ள நாடுகளுடன் “புதிய புலம்பெயர்ந்த கூட்டாண்மைகளை” அடைவதையும் ஜேர்மனி முடிவெடுத்துள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...