மக்காச்சோள பயிரைத் தாக்கும் படைப்புழு

Date:

மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழுவை அழிக்க வேளாண்மை அதிகாரிகள் ஆலோசனை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் பயிரிடப்பட்டு பராமரித்து வருகின்றனர்.

தற்போது தச்சம்பட்டு, வெறையூர் சின்னகல்லப்பாடி, பெரியகல்லபாடி, பவித்திரம், கல்லேரி, வாழாவெட்டி, தச்சம்பட்டு, தலையாம்பள்ளம், நரியாப்பட்டு, பாவப்பட்டு, பறையம்பட்டு, பாப்பம்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு அதனை பராமரித்து வருகின்றனர்.

2 மாதங்கள் ஆன நிலையில் மக்காச்சோள பயிர்களை அதிகளவில் படைப்புழு தாக்குவதினால் பயிர்கள் மிகவும் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் வளர்ச்சி இன்றி காணப்படுகிறது.

மேலும் தண்டு பகுதிகளை முழுவதும் பூச்சிகள் தின்று விடுவதினால் வளராமல் இருந்து விடுகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் இந்த படைப்புழுவை கட்டுப்படுத்த பல்வேறு மருந்துகளை தெளித்தாலும் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கிணற்று நீர் மற்றும் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி கடந்த 30 நாட்களுக்கு முன்பு மக்காச்சோளம் பயிரிடப்பட்டு அதனை பராமரித்து வருகிறோம், செடிகள் ஒரு அடி, இரண்டு அடி வளர்ந்தவுடன் படைப்புழு அதிகளவில் தாக்கப்படுவதால் செடிகள் வளர்ச்சி முழுவதும் குறைந்து போனது.

மேலும் தண்டு பகுதியில் அதிகளவில் இந்த பூச்சிகள் மறைந்திருந்து முழுவதும் தின்று விடுகிறது.

ஆலோசனை வழங்க வேண்டும் இதனால் மேல் பகுதி முழுவதும் காய்ந்த நிலையில் காணப்படுகிறது.

பல ஆயிரம் செலவு செய்து பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்களை படைப்புழு தாக்குவதினால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் கடும் சிரமமாக உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாய நிலங்களுக்கு நேரடியாக வந்து மக்காச்சோள பயிர்களை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் படைப்புழு தாக்குவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை கட்டுப்படுத்தவும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...