மரண பயத்தை காட்டிய டு பிளெசிஸ், மேக்ஸ்வெல் ஜோடி: திரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

Date:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 3 ஓட்டங்கள் குவித்து இருந்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் பார்னெல்-லிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இருப்பினும் கான்வே உடன் ஜோடி சேர்ந்த ரஹானே 20 பந்துகளில் 37 ஓட்டங்கள் அதிரடியாக குவித்து ஆட்டத்தை விறுவிறுப்பு அடைய வைத்தார்.

ஆனால் ஹசரங்கா வீசிய 9 ஓவர் 3வது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து ரஹானே வெளியேறினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த சிவம் துபே மற்றும் கான்வே ஜோடி பெங்களூரு அணி வீரர்களின் பந்துகளை எல்லைக்கு அப்பால் தொடர்ச்சியாக விரட்டியடித்தனர்.

தொடக்க வீரராக களமிறங்கிய கான்வே 45 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்சருடன் 83 ஓட்டங்கள் குவித்தார், சிவம் துபே 27 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்சர்கள் விளாசி 57 ஓட்டங்கள் சேர்த்தார்.

சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 226 ஓட்டங்கள் குவித்தது.

227 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில், தொடக்க வீரர் விராட் கோலி 6 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின் களத்தில் ஜோடி சேர்ந்த டு பிளெசிஸ், மேக்ஸ்வெல் ஜோடி சென்னை அணி பந்துவீச்சாளர்களின் பந்தை நாலாபுறமும் சிதறடித்தனர்.

கேப்டன் டூ பிளெசிஸ் 33 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 4 சிக்சருடன் 62 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் 36 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 8 சிக்சருடன் 76 ஓட்டங்களும் குவித்தனர்.

இதனால் பெங்களூரு அணி இமாலய இலக்கை துரத்தி பிடித்து சாதனை படைத்து வரும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் 12வது ஓவரில் தீக்ஷனா பந்தில் மேக்ஸ்வெல், 13.6 வது ஓவரில் மொயீன் அலி பந்தில் டூ பிளெசிஸ் வெளியேறவே ஆட்டத்தின் போக்கு சென்னை அணிக்கு சாதகமாக மாற தொடங்கியது.

தினேஷ் கார்த்திக் அவரது பங்கிற்கு 14 பந்துகளில் 28 ஓட்டங்கள் குவித்த போதிலும் துஷார் தேஷ்பாண்டே பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் 218 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் காஸ்பர் ரூட்

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர்...

ஐ.பி.எல். தொடரில் 200 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த சாஹல்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்,...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...

சதம் விளாசிய ஜெய்ஸ்வால்- 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள்...