மழை காரணமாக சென்னை – லக்னோ மேட்ச் நிறுத்தம்!!

Date:

மழை காரணமாக சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. லக்னோ மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார்.

காயம் காரணமாக லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் ஓய்வில் இருந்து வரும் நிலையில், அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பில் க்ருணல் பாண்ட்யா செயல்படுகிறார். லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மனன் வோரா மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் களத்தில் இறங்கினர்.

வோரா 11 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த சில போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கைல் மேயர்ஸ் இந்த போட்டியில் 17 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார்.

கரண் சர்மா 9 ரன்னும், கேப்டன் க்ருணல் பாண்ட்யா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். அதிரடி பேட்ஸ்மேன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 6 ரன்னில் வெளியேற லக்னோ அணி 44 ரன்கள் எடுத்திருந்தபோது 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதையடுத்து நிகோலஸ் பூரணுடன் இணைந்த ஆயுஷ் பதோனி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் ஒருநாள் போட்டியைப் போன்று விளையாட ஸ்கோர் சீராக உயர்ந்தது.

இருவரும் 6 ஆவது விக்கெட்டிற்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பூரன் 31 பந்துகளில் 20 ரன்களும், பதோனி 33 பந்துகளில் 59 ரன்களும் எடுத்தனர். 19.2 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி 125 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து மேட்ச் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...