மெக்சிகோவில் இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி

Date:

மெக்சிகோ நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்காவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய நகரம் நியூவோ லாரெடோவில் போதை பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் மிகுதியாகவுள்ளது.

இந்த கும்பல்களை சேர்ந்தவர்கள் அங்கு இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸாரை குறிவைத்து அவ்வப்போது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.

இராணுவமும் அவர்களுக்கு தக்கப்பதிலடியை கொடுத்து வருகின்ற நிலையில் நியூவோ லாரெடோ நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக இராணுவ வீரர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தேடும் பணியில் இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அங்குள்ள சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு வேனை சோதனைக்காக நிறுத்தும்படி இராணுவ வீரர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் அந்த வேன் நிற்காமல் இராணுவ வீரர்களை கடந்து சென்றுள்ளது. அதை தொடர்ந்து இராணுவ வீரர்கள் அந்த வேன் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில் வேன் சாலையோரமாக மோதியது. இதையடுத்து, இராணுவ வீரர்கள் அங்கு சென்று பார்த்த போது வேனில் இருந்த 5 பேர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளனர்.

வேனை சோதனையிட்டபோது அதில் துப்பாக்கி, போதை பொருள் போன்ற எதுவும் கிடைக்கவில்லை எனவும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 5 பேரும் பொது மக்கள் என்பது தெரியவந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“குட் பேட் அக்லி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

விடாமுயற்சியை அடுத்து நடிகர் அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்...

தகாத உறவை கண்டித்தால் சிக்கன் ரைஸில் விஷம்

நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (வயது 32) என்பவர் ஓட்டல்...

டி20 உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

ஐ.சி.சி.-யின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்க...

ஸ்டார்க் வேகத்தில் வீழ்ந்த மும்பை- 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா...