தாய்வான் வான்வெளியில் 42 சீன போர் விமானங்கள்

Date:

தாய்வான் நாட்டை தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிராந்திய பகுதியாக சீனா கூறி வந்தபோதும், தனி சுதந்திர நாடாக தாய்வான் செயல்பட்டு வருகிறது.

அந்நாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவுகரம் நீட்டியுள்ளன.இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், தாய்வானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா தனது வான் மற்றும் கடல்வழி ரோந்து பணிகள் மற்றும் இராணுவ பயிற்சிகளை தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை ஜின்குவா செய்தி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.அந்நிய சக்திகளுடன் கைகோர்த்து கொண்டு, தாய்வான் சுதந்திரம் கோரும் பிரிவினைவாதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை என சீனா தெரிவித்துள்ளது.

இதன்படி, தாய்வான் நாட்டின் வான்வெளி பாதுகாப்பு மண்டலத்திற்குள், இந்த பயிற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது என கூறப்படுகிறது. இதற்கு தாய்வான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி தாய்வான் தேசிய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள செய்தியில், எங்களது ஆயுத படைகள் 42 சீன போர் விமானங்களை கண்டறிந்துள்ளது. அவற்றில் கே.ஜே.-500, ஒய்-9, ஜே-10, ஜே-11, ஜே-16, சூ-30 உள்ளிட்டவையும் அடங்கும் என தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....