அயர்லாந்துடன் நாளை கடைசி டி20 போட்டி

Date:

ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முதல் போட்டியில் 2 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 33 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை (23-ந் தேதி) நடக்கிறது.

இந்த ஆட்டத்திலும் அயர்லாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது.

முதல் 2 ஆட்டத்தில் விளையாடாத வீரர்களுக்கு கேப்டன் பும்ரா வாய்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிதேஷ் சர்மா, ஷபாஸ் அகமது, முகேஷ் குமார், ஆவேஷ்கான் ஆகியோர் இன்னும் வாய்ப்பை பெறவில்லை. வாஷிங்டன் சுந்தர் இடத்தில் ஷபாஸ் அகமதுவும், ஷிவம் துபே இடத்தில் ஜிதேஷ் சர்மாவும் இடம் பெறலாம்.

பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரிங்குசிங் ஆகியோரும், பந்து வீச்சில் கேப்டன் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, பிஷ்னோய் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

பால் ஸ்டிரிங் தலைமையிலான அயர்லாந்து அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து ஆறுதல் வெற்றியை பெற கடுமையாக போராடும். இரு அணிகள் இடையே இதுவரை நடந்த 7 இருபது ஓவர் போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. அயர்லாந்து ஒரு ஆட்டத்தில் கூட வெல்லவில்லை. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...