காபோன் நாட்டில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது

Date:

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காபோன். இந்நாட்டின் ஜனாதிபதி பங்கொ ஒடிம்பா (வயது 64). இவரது தந்தை ஒமர் பங்கொ 1967ம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை காபோன் நாட்டின் ஜனாதிபதியாக ஆட்சி செய்து வந்தார்.

 

அதன் பின்னர் அவரது மகனான பங்கொ ஒடிம்பா 2009 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக செயல்பட்டு வந்தார்.

 

இதனிடையே, காபோன் நாட்டில் சமீபத்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. இந்த தேர்தலில் பங்கொ ஒடிம்பா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 3-வது முறையாக பங்கொ ஒடிம்பா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பங்கொ ஒடிம்பா வெற்றிபெற்றது செல்லாது என்று இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், காபோன் நாட்டில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளது.

 

மேலும், ஜனாதிபதி பங்கொ ஒடிம்பாவை வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் காபோன் நாட்டில் 55 ஆண்டுகால குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...