துப்பாக்கி உற்பத்தி பட்டறை முற்றுகை – தந்தை, மகன் கைது

Date:

கம்பஹா – கலேலிய பிரதேசத்தில் டங்கன் மாவத்தையில் தொழிற்சாலை என்ற போர்வையில் இயங்கி வந்த துப்பாக்கி உற்பத்தி பட்டறையை பொலிஸார் முறியடித்துள்ளனர்.

துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களை தயாரித்து ஆயுதங்களை விற்பனை செய்ததற்காக அல்லது வாடகைக்கு விடுவதற்காக வைத்திருந்த 62 வயதுடைய நபரையும் அவரது 32 வயது மகனையும் பல்லேவல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளை பல நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு இயந்திர பாகங்கள், ஒரு ஏர் ரைபிள், 2 கிலோ ஈயம், உலோக குழாய்கள், கத்திகள், வெடிமருந்து உறைகள் உட்பட துப்பாக்கிகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பல பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த வியாபாரத்திற்கு உதவிய ஏனைய நபர்களை கண்டறிய பல்லேவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...