வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட நிதி கணிசமான அளவு அதிகரிப்பு!

Date:

கடந்த ஜூலை மாதம் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட நிதி கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாதத்தில் 54 கோடியே 10 லட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி அனுப்பி இலங்கைக்கு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 27 கோடியே 90 லட்சம் அமெரிக்க டொலர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், இந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியினுள் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்று ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 15 பெர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதேபோன்று கடந்த ஜூன் மாதம் இலங்கை வந்;திருந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 388 ஆக பதிவாகியுள்ள நிலையில், ஜூலை மாதத்தில் அந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 39 ஆக அதிகரித்துள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருக்கும் நிலையில், இந்த வருட ஜூலை மாதத்தில் சுற்றுலாத்துறை மூலம் 21 கோடியே 90 லட்சம் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி வருவாய் பெறப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...