G-20 கூட்டமைப்பின் தலைமை பிரேசிலிடம் ஒப்படைப்பு

Date:

டெல்லியில் நடைபெற்ற G-20 உச்சிமாநாடு நிறைவடைந்தது.

இந்தியா தலைமையில் நடைபெற்ற G-20 உச்சிமாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான G-20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான G-20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டில் இடம்பெறவுள்ளது.

இந்தியாவிடமிருந்து G-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை பெற்றுக்கொண்ட பின் பிரேசில் ஜனாதிபதி  லுலா டா சில்வா தெரிவிக்கையில்,

பிரேசிலின் தலைமையிலான G-20 கூட்டமைப்பு 3 முக்கியத்துவங்களை கொண்டுள்ளது.

1. சமூக ஒன்றிணைப்பு மற்றும் பட்டினிக்கு எதிரான போராட்டம்

2. ஆற்றல் மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி

3. உலகளாவிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம் ஆகியவையாகும்.

‘நியாயமான மற்றும் நிலையான உலகத்தை கட்டமைத்தலே’ பிரேசில் தலைமையிலான G-20 கூட்டமைப்பின் பொன்மொழியாகும். பசி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய கூட்டணி, காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய அணி திரட்டல் ஆகிய இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன’ என தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...