பண மோசடியில் ஈடுபட்ட பெண் சிக்கினார்

Date:

பொரளை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் போல் நடித்து பணத்தை மோசடி செய்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் 05 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் தனியார் காப்புறுதி நிறுவனத்தில் பணிபுரிந்தவாறு இந்த பண மோசடியை செய்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், உயர் பெண் பொலிஸ் அதிகாரி எனக் கூறி இரண்டு சந்தர்ப்பங்களில் 5 இலட்சம் ரூபாயை அவரது வங்கி கணக்கில் வைப்பிலிட செய்துள்ளார்.

பொரளை சரணபால மாவத்தையை சேர்ந்த 24 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பொலிஸ் அடையாள அட்டை மற்றும் பொலிஸ் தலைமையகத்தின் லெட்டர்ஹெட் ஆகியவற்றை போலியாக தயாரித்து, அதன் புகைப்படங்களை வாட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் அனுப்பி இந்த மோசடியை செய்துள்ளார்.

போலி ஆவணங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...