அமைச்சர் ஹரீனுக்கு எதிரான விசாரணை குறித்து சட்டமா அதிபரின் பணிப்புரை

Date:

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்து அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை முடிவுறுத்துமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (13) உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஹரின் பெர்னாண்டோ சில காலத்திற்கு முன்னர் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று அழைக்கப்பட்டிருந்த  போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் மேற்கண்டவாறு அறிவித்தார்.

இந்த மனு இன்று அழைக்கப்பட்டிருந்த போது, ​ சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக் கோப்புகளை ஆராய்ந்த பின்னர் மனுதாரர் ஹரின் பெர்னாண்டோ குறித்த விசாரணையை முடிவுறுத்துமாறு  சட்டமா அதிபரால் கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி பணிப்புரை விடுத்திருந்ததாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

புவனேக அலுவிஹாரே, பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று அழைக்கப்பட்டிருந்தது.

அதேநேரம் இந்த மனுவை முன்னோக்கி கொண்டு செல்வதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக ஜனக் டி சில்வா அங்கம் வகிக்காத நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் 18ஆம் திகதி மனுவினை அழைப்பதற்கும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...