ஒரு நாய்க்கு இருவர் சண்டை !

Date:

கிளிநொச்சியில் வளர்ப்பு நாய் ஒன்றை இருவர் உரிமை கோரி நீதிமன்றம் சென்றதனால் அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.

 

வளர்ப்பு நாயை கடத்தி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டவரின் சார்பில் முன்வைக்கப்பட்ட  விண்ணப்பத்துக்கு அமைய இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

 

கிளிநொச்சியில் உள்ள குடியிருப்பாளர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் வளர்ப்பு நாயை கடத்தி கட்டிவைத்துள்ளதாக ஒருவர் மீது கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர்.

 

“இந்த வழக்குடன் தொடர்புடைய நாயை குற்றஞ்சாட்டப்பட்டவரே வளர்த்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன் அயல் வீட்டில் உள்ள அதே இன நாயுடன் இன விருத்திக்காக சேர்க்கப்பட்டது.

 

அதன் பின் சில நாட்களில் குற்றஞ்சாட்டப்பட்டவரது வளர்ப்பு நாயைக் காணவில்லை.  இந்த நிலையிலேயே கடந்த சில தினங்களுக்கு அவரது நாய் வீடு தேடி வந்துள்ளது.

 

அதன் பின் ஆராய்ந்த போது, அயலவர் குறித்த நாயை மற்றுமோர் இடத்தில் வசிக்கும் தனது மகளின் வீட்டுக்கு அழைத்து சென்று வளர்த்துள்ளார். அவரது மகள் தூரப் பயணம் செய்வதனால் குறித்த நாயை சில நாட்களுக்கு முன் அழைத்து வந்து பெற்றோரின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.

 

அதனாலேயே தன்னை வளர்த்தவர் வீட்டுக்கு நாய் மீண்டும் வந்துள்ளது. அதனையே அயலவர் தனது நாய் என்று உரிமை கோருகிறார்.

 

இந்த நாயின் பரம்பரையுள்ள பெண் நாய் ஒன்று தற்போதும் உள்ளது. அதனது மரபணுவையும் இந்த நாயினது மரபணுவையும் பரிசோதனை செய்ய கட்டளையாக்கவேண்டும்” என்று சமர்ப்பணத்தில் சட்டத்தரணி முன்வைத்தார்.

 

அதனை ஆராய்ந்த நீதிமன்று கிளிநொச்சி மாவட்ட விலங்கியல் மருத்துவ அதிகாரி ஊடாக இரண்டு நாய்களது மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கட்டளையிட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....