ஆசிய விளையாட்டு 2023: ஹாக்கி போட்டியில் தங்கம் வென்றது இந்தியா

Date:

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

2018ஆம் அண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்த ஜப்பான் அணியை வீழ்த்தியதன்மூலம், ஆசிய விளையாட்டில் 4வது முறையாக இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இதன்மூலம் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தகுதியடைந்துள்ளது.

நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப். 23 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.

13 ஆவது நாளான இன்று, ஆடவருக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்த ஜப்பான் அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 5-1 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஹாக்கி போட்டியில் 4வது முறையாக இந்தியா தங்கம் வென்றுள்ளது. பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் இந்தியா தகுதியடைந்துள்ளது.

இந்திய அணி இதுவரை 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 95 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...