போட்டி போட்டு மிஸ் பீல்டிங்- ஆஸ்திரேலியாவுக்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா

Date:

ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் 10-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டிகாக் – பவுமா களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 35 ரன்கள் எடுத்திருந்த போது பவுமா மேக்ஸ்வெல் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த ராஸ்ஸி வான் டெர் டுசென் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி வந்த டிகாக் சதம் அடித்து அசத்தினார். சதம் அடித்த கையோடு டிகாக் (109) பெவிலியன் திரும்பினார்.

இதனையத்து மார்க்ரம் – கிளாசன் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க்ரம் அரை சதம் விளாசினார். அவர் 56 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்து வீச்சிலும் கிளாசன் 29 ரன்னில் ஹசில்வுட் பந்து வீச்சிலும் ஆட்டமிழந்தனர்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்களில் பீல்டிங் சற்று மோசமாக இருந்தது. 48 ஓவரில் இரண்டு கேட்ச் மிஸ் செய்தனர்.

https://www.instagram.com/p/CyTG-5kvT6t/

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 311 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...