2024 ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய கான்வே: சி.எஸ்.கே அணிக்கு பின்னடைவா?

Date:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக டேவன் கான்வே தனது, கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தால், வரும் மார்ச் 22-ம் தேதி ஆரம்பமாகும் ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் ஆஸ்திரேலியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்றது. இதில், நியூசிலாந்து அணியின் இடதுகை தொடக்க ஆட்டக்காரரான கான்வேவின் கட்டைவிரலின் காயம் ஏற்பட்டது. இதற்காக வரும் வாரம் அவர் அறுவை சிகிக்சை மேற்கொள்ள இருப்பதாகவும், 8 வாரங்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக நியூசிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மே மாதம் வரை அவர் கிரிக்கெட் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல் 2024 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே அணி தனது பயிற்சியை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக சென்னை அணியின் தீபக் சஹார், சிமர்ஜித் சிங், ராஜவர்தன் ஹங்கேர்கர், முகேஷ் சௌதரி, பிரசாந்த் சோலங்கி, அஜய் மண்டல் ஆகியோர் பயிற்சிக்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல் 2024 தொடரின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது.

கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக டேவன் கான்வே 672 ரன்கள் குவித்தார். இந்நிலையில் சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும், டேவன் கான்வே முதல் பாதியில் விளையாடமாட்டார் என்பது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...