பேட்டிங் செய்ய களம் இறங்கும்போது பதட்டம் அடைந்தேன்: ரிஷப் பண்ட்

Date:

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 15 மாதங்களுக்கு பிறகு இன்று போட்டி கிரிக்கெட்டில் களம் இறங்கினார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக 13 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் இரண்டு பவுண்டரிகள் அடங்கும்.

இந்த போட்டியில் டெல்லி அணி 174 ரன்கள் அடித்த போதிலும், பஞ்சாப் அணி சேஸிங் செய்துவிட்டது. போட்டி முடிந்த பின் ரிஷப் பண்ட் கூறியதாவது:-

தனிப்பட்ட முறையில் பேட்டிங் செய்யும்போது மிகவும் பதட்டம் அடைந்தேன். நீங்கள் களத்தில் இறங்கும்போது இதை எதிர்கொண்டுதான் செல்ல வேண்டும். பதட்டம் அடைவது இது முதல்தடவை அல்ல. ஆனால் மீண்டும் போட்டி கிரிக்கெட்டிற்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது.

நாங்கள் பேட்டிங் சற்று சறுக்கிய நிலையில், இஷாந்த் சர்மா காயம் அடைந்தது, ஒரு பந்து வீச்சாளர் குறைவு என்பதை தெளிவாக காட்டியது. நாங்கள் நல்ல ஸ்கோர்தான் அடித்திருந்தோம். ஆனால், ஒரு பந்து வீச்சாளர் குறைவு என்றபோதிலும், மேலும் இதுகுறித்து பேச முடியாது.

நாங்கள் எதிர்பார்த்தபடி ஆடுகளம் வேலை செய்தது. காரணங்கள் ஏதும் கூற முடியாது. நாங்கள் இதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம். ஆனால், ஒரு பந்து வீச்சாளர் குறைவு என்பது நல்லதல்ல. கூடுதல் பந்து வீச்சாளர் என்பதில் எங்களுக்கு குறை இருந்தது. நாங்கள் முற்றிலும் விளையாட்டை எங்கள் பக்கம் கொண்டு வர முடியவில்லை. இது விளையாட்டின் ஒருபகுதிதான்.

இவ்வாறு ரிஷப் பண்ட் தெரிவித்தார்.

விக்கெட் கீப்பிங் பணியில் ஒரு கேட்ச் பிடித்ததுடன், அட்டகாசமான வகையில் ஒரு ஸ்டம்பிங் செய்தார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...