T20 உலகக் கிண்ணத் தொடர்பான இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

Date:

T20 உலகக் கிண்ண தொடர்பான இலங்கையின் 32 வீரர்கள். கொண்ட ஆரம்ப அணி பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பானுக ராஜபக்ச,விஜய்காந்த் வியாஸ்காந்த் மற்றும் லஹிரு மதுஷங்க ஆகியோர் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஜயகாந்த் வியாஸ்காந்த் தற்போது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் , ஆரம்ப அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் உள்நாட்டு டி20 போட்டிகளில் விளையாடுவார்கள்.

அங்கு காட்டப்படும் திறமையின் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இறுதி அணி பெயரிடப்படும் என கூறப்படுகிறது.

32 பேர் கொண்ட இலங்கையின் ஆரம்ப டி20 அணி கீழே உள்ளது.

வனிந்து ஹசரங்க (தலைவர்),
சரித் அசலங்க (துணைத் தலைவர்),
குசல் மெண்டிஸ்,
பதும் நிஷ்சங்க,
சதீர சமரவிக்ரம,
அஞ்சலோ மெத்யூஸ்,
கமிந்து மெண்டிஸ்,
தசுன் ஷானக,
சாமிக்க கருணாரத்ன,
ஜனித் லியனகே,
அவிஷ்க பெர்னாண்டோ,
லசித் க்ருஸ்புல்லே,
தினேஷ் சந்திமால்,
சஹான் ஆரச்சிகே,
நிரோஷன் திக்வெல்ல,
குசல் ஜனித் பெரேரா,
பானுக ராஜபக்ஷ,
தனஞ்சய டி சில்வா,
அகில தனஞ்சய,
துனித் வெல்லாலகே,
துஷ்மந்த சமீர,
டில்ஷான் மதுஷங்க,
அசித பெர்னாண்டோ,
பிரமோத் மதுஷான்,
மகேஷ் தீக்ஷன,
மதீஷ பத்திரன,
லஹிரு குமார,
லஹிரு மதுஷங்க,
நுவன் துஷார,
பினுர பெர்னாண்டோ ,
ஜெப்ரி வெண்டர்சே,
விஜய்காந்த் வியாஸ்காந்த்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...