வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்- முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 371 ரன்னில் ஆல் அவுட்

Date:

வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மிகைல் லூயிஸ் 27 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக சாக் கிராலி – டக்கெட் களமிறங்கினர். டக்கெட் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஒல்லி போப் கிராவ்லியுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

57 ரன்னில் போப்பும் 76 ரன்னில் சாக் கிராலியும் ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து ரூட்- ஹரி ப்ரூக் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். அற்புதமாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தனர். 50 ரன்கள் எடுத்த நிலையில் ப்ரூக் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்டோக்ஸ் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ரூட் 68 ரன்னில் வெளியேறினார். இறுதி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேமி ஸ்மித் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 371 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...