‘மகா காளி’ இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ திரைப்படம்

Date:

அனுமான் படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா கதையில் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. பான் இந்திய படமாக வெளியான அனுமான் திரைப்படம் மூலம் இயக்குனர் பிரசாந்த் வர்மா கவனம் பெற்றார். இந்தப் படத்தில் பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்கினார். இந்த யுனிவர்ஸில் 3ஆவது படத்தை பிரசாந்த் வர்மா அறிவித்தார். இதன் பெயர் மகா காளி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் பெண் சூப்பர்ஹீரோ படமாக உருவாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது. .இந்தப் படத்துக்கான கதையை இயக்குநர் பிரசாந்த் வர்மா எழுதியுள்ளார்.

ஆர்கேடி ஸ்டூடியோஸ் சார்பாக ரிவாஸ் ரமேஷ் டுக்கல் தயாரிக்க பெண் இயக்குநர் பூஜா அபர்ணா கொலுரு இயக்குகிறார். இதற்கு முன்பாக மார்டின் லூதர் கிங் படத்தை இயக்கியுள்ளார்.வழக்கமானதை உடைக்கும் மனப்பான்மையுடன் இந்தப் படத்தில் கறுப்பு நிற பெண்ணை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சமரன் சாய் இசையமைக்கிறார். விரைவில் படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய தொன்மத்துடன் உருவாகும் இந்த மேஜிக்கல் ரியலிசம் படம் மக்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஐமேக்ஸ் 3டி, பல்வேறு மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் அனுமன் ஜப்பானில் வெளியானது குறிப்பிடத்தக்கது

படத்தின் அறிவிப்பு போஸ்டரில் ஒரு பெண், புலியின் தலையை தொடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...