நடுவானில் விமானத்தில் ‘காக்பிட்’டுக்கு வெளியே நிறுத்தப்பட்ட பெண் பைலட்

Date:

ஆஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து இலங்கையின் கொழும்புக்கு வந்த ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ விமானத்தில், தன்னிடம் சொல்லாமல் கழிப்பறைக்கு சென்ற உதவி பைலட்டை காக்பிட்டுக்கு வெளியே நிற்க வைத்து, விமான கேப்டன் பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து இலங்கையின் கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்சின் யு.எல்., 607 என்ற விமானம் சமீபத்தில் வந்தது. 10 மணி நேரம் பயண துாரம் உடைய இந்த விமானத்தை ஆண் கேப்டன் இயக்கினார். அவருடன் பெண் பைலட் உதவிக்கு இருந்தார்.

விமானத்தை இயக்குவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்படி, ‘காக்பிட்’ எனப்படும் பைலட்டுகள் இருக்கும் அறையில் கேப்டன் உடன் எப்போதும் உதவி பைலட் அல்லது விமான ஊழியர் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும். இந்நிலையில், அந்த விமானத்தில் கேப்டனிடம் சொல்லாமல், விமான ஊழியர் யாரையும் ஏற்பாடு செய்யாமல், பெண் பைலட் கழிப்பறைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

திரும்பி வந்த போது, விமானத்தின் கேப்டன் காக்பிட்டை உள்பக்கமாக பூட்டி விட்டார். பெண் பைலட்டை காக்பிட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

இதனால், பெண் பைலட் வெளியே நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது கேப்டனுக்கும், பெண் பைலட்டுக்கும் இடையே வார்த்தை மோதலை உண்டாக்கியது. பின், விமானத்தில் இருந்த மூத்த ஊழியர், கேப்டனை அழைத்து பேசி சமாதானப்படுத்திய பின், அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணை முடியும் வரை கேப்டனுக்கு பணி வழங்கப்படாது என கூறியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...