வளையம் மற்றும் கங்கன சூரிய கிரணம் இணையும் ஹைபிரிட் எனப்படும் கலப்பின சூரிய கிரகணமாக இன்று தென்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இந்த சூரிய கிரகணமானது இன்றைய தினம் காலை 7.04 முதல் மதியம் 12.29 வரை ஏற்பட உள்ளது.
முற்பகல் 9.46க்கு சூரிய கிரகணம் உச்ச நிலையை அடையவுள்ளது.
தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா, பசுபிக் பெருங்கடல் பகுதி, இந்தியப் பெருங்கடல் பகுதி, அண்டார்டிக்கா ஆகிய பகுதிகளில் வலைய கிரகணம் தென்படவுள்ளது.
அவுஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் வட மேற்கு பகுதியில் முழு சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்.
எவ்வாறாயினும், இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தென்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
சூரியன் மற்றும் பூமிக்கு இடையே சந்திரன் வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகின்றது.
அதாவது சூரிய ஒளியை சந்திரன் இடைமறிப்பதால் இந்த சூரிய கிரகணம் உண்டாகிறது.
குறித்த கலப்பு சூரிய கிரகணம் மிகவும் அரிதாக தென்படக்கூடியதாகும்.