16 ஆயிரம் இதய அறுவை சிகிச்சை செய்த டாக்டர் 41 வயதில் மாரடைப்பால் மரணம்

Date:

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் காந்தி (41). இவர், இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிவந்தார்.

ஜாம்நகரில் மருத்துவம் பயின்ற இவர், அகமதாபாத்தில் இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றார். இவர் தனது பணிக் காலத்தில் 16 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து உள்ளார்.

எனினும், செவ்வாய்க்கிழமை காலை மாரடைப்பால் இவர் உயிரிழந்தார். திங்கள் கிழமை இரவு நோயாளிகளுக்கு வழக்கம்போல் மருத்துவம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய அவர், இரவு உணவுக்குப் பிறகு படுத்து தூங்கியுள்ளார்.

காலை நீண்ட நேரம் ஆகியும் எழாததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால் அவர் எழுதிருக்கவில்லை உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். மாரடைப்பால் அவர் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...