2 ஆண்டுகளாக உடலை பிரீசரில் மறைத்து வங்கி ஏ.டி.எம்.மை பயன்படுத்திய நபர்

Date:

இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்காம் நகரில் ஹோலிவெல் ஹெட் பகுதியில், பிளாட் ஒன்றில் வசித்து வருபவர் தமியோன் ஜான்சன் (வயது 52). இவருடன் ஜான் வெயின்ரைட் (வயது 71) என்ற முதியவர் பிளாட்டை பகிர்ந்து கொண்டுள்ளார். ஜான் ஓய்வு தொகையும் பெற்று வந்து உள்ளார்.

ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டில் பிரீசர் ஒன்றில் இருந்து ஜானின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இதில், 2018-ம் ஆண்டு ஜான் உயிரிழந்து உள்ளார்.

எனினும், 2 ஆண்டுகளாக ஜானின் உடலை தமியோன் பிரீசரில் மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. குடியிருப்பில் வசித்த சக மனிதரின் இறுதி சடங்கை முறையாக செய்யாத குற்றச்சாட்டுடன், உயிரிழந்த ஜானின் வங்கி கணக்கை தனது தனிப்பட்ட உபயோகத்திற்கு தமியோன் பயன்படுத்தி உள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது

ஆனால், இந்த குற்றச்சாட்டை தமியோன் மறுத்து உள்ளார். அந்த பணம் தன்னுடையது என கூறியுள்ளார். முதியவர் ஜான் உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், இருவரும் ஒன்றாக வசித்தபோதே அவரது மரணம் நடந்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

ஜானின் வங்கி அட்டையை பயன்படுத்தி பொருட்களை வாங்கியும், ஏ.டி.எம். அட்டை உதவியுடன் பணம் எடுத்தும் மற்றும் தனது வங்கி கணக்கிற்கு பணபரிமாற்றங்களை செய்தும் உள்ளார் என தமியோன் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. ஆனால், இதனை அவர் மறுத்து உள்ளார். இந்த வழக்கு விசாரணை வருகிற நவம்பர் 7-ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

 

Share post:

[tds_leads title_text="Subscribe" input_placeholder="Email address" btn_horiz_align="content-horiz-center" pp_checkbox="yes" pp_msg="SSd2ZSUyMHJlYWQlMjBhbmQlMjBhY2NlcHQlMjB0aGUlMjAlM0NhJTIwaHJlZiUzRCUyMiUyMyUyMiUzRVByaXZhY3klMjBQb2xpY3klM0MlMkZhJTNFLg==" f_title_font_family="653" f_title_font_size="eyJhbGwiOiIyNCIsInBvcnRyYWl0IjoiMjAiLCJsYW5kc2NhcGUiOiIyMiJ9" f_title_font_line_height="1" f_title_font_weight="700" f_title_font_spacing="-1" msg_composer="success" display="column" gap="10" input_padd="eyJhbGwiOiIxNXB4IDEwcHgiLCJsYW5kc2NhcGUiOiIxMnB4IDhweCIsInBvcnRyYWl0IjoiMTBweCA2cHgifQ==" input_border="1" btn_text="I want in" btn_tdicon="tdc-font-tdmp tdc-font-tdmp-arrow-right" btn_icon_size="eyJhbGwiOiIxOSIsImxhbmRzY2FwZSI6IjE3IiwicG9ydHJhaXQiOiIxNSJ9" btn_icon_space="eyJhbGwiOiI1IiwicG9ydHJhaXQiOiIzIn0=" btn_radius="3" input_radius="3" f_msg_font_family="653" f_msg_font_size="eyJhbGwiOiIxMyIsInBvcnRyYWl0IjoiMTIifQ==" f_msg_font_weight="600" f_msg_font_line_height="1.4" f_input_font_family="653" f_input_font_size="eyJhbGwiOiIxNCIsImxhbmRzY2FwZSI6IjEzIiwicG9ydHJhaXQiOiIxMiJ9" f_input_font_line_height="1.2" f_btn_font_family="653" f_input_font_weight="500" f_btn_font_size="eyJhbGwiOiIxMyIsImxhbmRzY2FwZSI6IjEyIiwicG9ydHJhaXQiOiIxMSJ9" f_btn_font_line_height="1.2" f_btn_font_weight="700" f_pp_font_family="653" f_pp_font_size="eyJhbGwiOiIxMyIsImxhbmRzY2FwZSI6IjEyIiwicG9ydHJhaXQiOiIxMSJ9" f_pp_font_line_height="1.2" pp_check_color="#000000" pp_check_color_a="#ec3535" pp_check_color_a_h="#c11f1f" f_btn_font_transform="uppercase" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjQwIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGUiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM1IiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGVfbWF4X3dpZHRoIjoxMTQwLCJsYW5kc2NhcGVfbWluX3dpZHRoIjoxMDE5LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" msg_succ_radius="2" btn_bg="#ec3535" btn_bg_h="#c11f1f" title_space="eyJwb3J0cmFpdCI6IjEyIiwibGFuZHNjYXBlIjoiMTQiLCJhbGwiOiIxOCJ9" msg_space="eyJsYW5kc2NhcGUiOiIwIDAgMTJweCJ9" btn_padd="eyJsYW5kc2NhcGUiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTBweCJ9" msg_padd="eyJwb3J0cmFpdCI6IjZweCAxMHB4In0="]
spot_imgspot_img

Popular