2 கோடி பெறுமதியான கொக்கெய்னுடன் வெளிநாட்டு பிரஜை கைது !

Date:

சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான 350 கிராம் கொக்கெய்னுடன் மெசிடோனியா நாட்டு பிரஜை ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் இன்று (13) கைது செய்துள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான நடத்தை காரணமாக பிரேசில் நாட்டிலிருந்து வருகைதந்த மெசிடோனிய பிரஜையை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, ​​அவர் வைத்திருந்த பையில் கொக்கெய்ன் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 54 வயதுடைய சந்தேகநபர் இலங்கைக்கு வருவது இதுவே முதல் தடவை எனவும் சந்தேக நபருடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...