3 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாயம்!

Date:

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேகாலை, பதுளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல மற்றும் பசறை பிரதேச செயலகப் பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் கேகாலை பிரதேச செயலகப் பிரிவுக்கும், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை பெய்து வருகின்றது.

குறிப்பாக கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை!

வட மாகாணத்தில் இன்று (18) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என...

மாற்று விரலில் மைப் பூச தீர்மானம்

எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்,...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டளவியல் திணைக்களம்...