யாழ்ப்பாணம் அனலைதீவு கடற்பரப்பில் 420 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை அனலைதீவு நடுக்கடலில் இரண்டு படகுகளில் குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அனலைதீவு பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.