இன்றைய ராசிபலன் 07 04 2023

Date:

மேஷம்

இன்றைய நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமைகிறது. நீங்கள் சமூகத்தில் நல்ல பேர் எடுக்க வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் பண இலாபங்கள் எதிர்பார்க்கலாம். உங்கள் சொந்த வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் திருப்தி நிறைந்திருக்கும். இன்று நீங்கள் அறிவுபூர்வமான பேச்சுகளின் ஒரு அங்கமாக இருப்பீர்கள். உங்கள் மனதில் இன்று பல வித எண்ணங்கள் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் திருப்திகரமான குணத்தை மேற்கொண்டால் அதனால் நீங்கள் பயனடைய வாய்ப்பு உண்டு.

ரிஷபம்

இன்றைய நாள் உங்களுக்கு சந்தோஷமான நாளாக அமைகிறது. நீங்கள் நாள் முழுவதும் சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் மன ரீதியிலும் ஆரோக்கியத்தை உணர்வீர்கள். உங்கள் வேலைகள் எல்லாம் நீங்கள் நினைத்தாற்போல முடிவடையும். வருமானத்தில் இலாபம் ஏற்படும். உங்களால் முடிவடையாத வேலைகள் முழுமையாகும். உங்கள் பெற்றோர்களிடமிருந்து நல்ல செய்தியை நீங்கள் எதிர்பார்க்கலாம். அவர்களால் உங்களுக்கு இலாபமும் கிடைக்கும். நோய்வாய்ப்பட்ட மக்கள் நோயிலிருந்து விடுபட வாய்ப்புள்ளது.

மிதுனம்

இன்றைய நாள் உங்களுக்கு கவலையான நாளாக அமைகிறது. இந்த வாரம் உங்கள் வாழ்க்கை துணை அல்லது குழந்தையின் உடல் நலம் கொஞ்சம் கவலைக்குறியதாக இருக்கும். எந்த வித வாக்குவாதம் மற்றும் பேச்சுவார்த்தைகளிலிருந்து தள்ளி இருக்கவும். எவருக்கும் உங்களை அவமானபடுத்துவதற்கான வாய்ப்பு கொடுக்காதீர்கள். நண்பர்களுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். வயிறு சம்பந்தமான நோய் வாய்பட வாய்ப்பு உண்டு. வேலையின் ஆரம்பத்தில் தோல்விகள் வர வாய்ப்புள்ளது. வாகன

கடகம்

இன்றைய நாள் உங்களுக்கு சோர்வான நாளாக அமைகிறது. கெட்ட எண்ணங்கள் உங்களை வருத்தமடைய செய்ய வாய்ப்பு உள்ளது. நீங்கள் உற்சாகம், சக்தி மற்றும் சந்தோஷத்தை இழந்த மாதிரி இருப்பீர்கள். குடும்ப உறவினர்களுடன் சண்டை போடும் வாய்ப்பும் உள்ளது. செலவுகள் அதிகரிக்கும், நீங்கள் தோல்வியை சந்திக்கவும் வாய்ப்பு ஏற்படலாம். நீங்கள் இருத நோயால் பாதிக்கபடலாம்.

சிம்மம்

இன்றைய நாள் உங்களுக்கு அமைதியான நாளாக அமைகிறது. நீங்கள் இன்று மிக்க மகிழ்ச்சியையும், அமைதியையும் உணர்வீர்கள். சகோதர, சகோதரிகளின் பிணைப்பு மேலும் பலமாகும். அவர்கள் உங்களுக்கு உதவியாகவும் இருப்பார்கள். நீங்கள் ஒவ்வொரு உறவின் உணர்வுகளின் ஆழத்தை புரிந்துகொள்வீர்கள். பக்கத்தில் இருக்கும் சுற்றுலா தளத்துக்கு செல்ல திட்டமிடலாம். இன்று நீங்கள் பதற்றம் இல்லாது இருப்பீர்கள். நீங்கள் செய்யும் எந்த வேலையிலும் வெற்றி அடைவீர்கள்.

கன்னி

இன்றைய நாள் உங்களுக்கு முயற்சி செய்ய வேண்டிய நாளாக அமைகிறது. குடும்ப சூழ்நிலை சந்தோஷமானதாக இருக்கும். உங்க இனிப்பான பேச்சுகள் மூலம் நீங்க உங்க வேலையை வெற்றிகரமா முடித்துகொள்வீர்கள். அறிவுப்பூர்வமான பேச்சுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். நீங்கள் சில இனிப்பு பண்டத்தை விரும்பி இன்று சாப்பிடுவீர்கள். உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். உங்களுக்கு இது முயற்சி செய்ய வேண்டிய காலமாக இருக்கும்.

துலாம்

இன்றைய நாள் உங்களுக்குச் சிறப்பான நாளாக அமைகிறது. உங்கள் ஆக்கபூர்வ தன்மையின் உச்சத்தில் இருப்பீர்கள். சிறந்த ஆக்கபூர்வமான கருத்துகளுடன் வெளிவருவீர்கள். ஆரோக்கியமான மன நிலை மற்றும் உடல் நிலை இன்று உங்களுக்கு இருக்கும். உங்கள் வேலையில் கவனம் செலுத்துவீர்கள். அதை நேரத்துடன் முடித்து விடுவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியான பொழுதுபோக்கில் அதிக அளவு செலவு செய்யலாம்.

விருச்சிகம்

இன்றைய நாள் உங்களுக்கு எச்சரிக்கையான நாளாக அமைகிறது. உங்களுக்கு சிகிச்சை ஏதாவது நிகழும் வாய்ப்புள்ளது. நீங்கள் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். உடல் நலம் மற்றும் மன நிலை கொஞ்சம் குழப்பமாக இருக்கக்கூடும். நீங்கள் சந்தோஷமாக இருப்பதற்காக செலவு செய்யலாம். நீங்கள் விரும்புபவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தனுசு

இன்றைய நாள் உங்களுக்கு இலாபம் தரும் நாளாக அமைகிறது. உங்கள் குடும்ப வாழ்க்கையை முழுமையாக மகிழ்ச்சியோடு செலவழிப்பீர்கள். உங்கள் நண்பர்களுடன் ஒரு சிறு சுற்றுலாவிற்கு போகலாம். உங்கள் வருமானத்தில் உயர்வு இருக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் விருப்பப்பட்ட உணவை சுவைத்து உண்பீர்கள்

மகரம்

இன்றைய நாள் உங்களுக்கு அருமையான நாளாக அமைகிறது. இன்று வியாபாரத்தில் நீங்கள் இலாபம் அடைவீர்கள் என்று கணேஷா கூறுகிறார். இந்த நாள் பணம் மீட்பது, போக்குவரத்து மற்றும் வருமானத்துக்கான நல்ல நாளாகும். நீங்கள் அரசாங்கம், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து இலாபம் அடைவீர்கள். நீங்கள் நெருப்பு, நீர், மற்றும் விபத்துகளிலிருந்து தள்ளி இருப்பது நல்லது. வியாபார சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக நீங்கள் வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். உங்கள் குழந்தையின் படிப்பு முன்னேற்றத்தில்

கும்பம்

இன்றைய நாள் உங்களுக்கு நடுத்தரமான நாளாக அமைகிறது. நீங்கள் கொஞ்சம் சோகமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் உங்கள் மன நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சோர்வினால் உங்கள் உற்சாகம் குறையும். உங்கள் சக பணியாளர்கள் சந்தோஷம் அடைய மாட்டார்கள், இது சில பிரச்சனைகளை உருவாக்கும். நீங்கள் பொழுதுபோக்கிற்காக இன்று செலவிடுவீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வெளிநாட்டிலிருந்து ஏதாவது தகவலை எதிர்பார்க்கலாம்.

மீனம்

இன்றைய நாள் உங்களுக்கு மிதமான நாளாக அமைகிறது. இன்று உங்களுக்கு அதிக முயற்சி தேவைபடும். வேலைகளுக்கு இன்று நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள். என்றாலும் சவால்களிலிருந்து உங்களால் தப்பிக்க முடியாது. ஆனால் அதற்கான பலன் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் உடல் நிலை மற்றும் செலவுகளிலும் கவனமாக இருக்க வேண்டும். கடவுள் மீதான சிறிது நம்பிக்கை இந்த நாளை அருமையான நாளாக மாற்றி கொடுக்கும்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற...