பண்டிகை காலத்தில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் இவ்வாறான வாகன விபத்துக்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கடந்த 5 நாட்களில் 270 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்கள் வாகனங்களை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
எனவே, அதனை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களும், சாரதிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மது போதையில் வாகனம் செலுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
சாரதிகள் உரிய வீதி விதிகளை கடைப்பிடித்து, வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ அறிவுறுத்தியுள்ளார்.