சிஎஸ்கே அணிக்கு எதிராக 202 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

Date:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

துவக்க வீரர் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் ஜாஸ் பட்லர் சிறப்பான ஒத்துழைப்பை வழங்க. ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 86 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ஜாஸ் பட்லர் 27 ரன்களில், ஆட்டமிழந்தார். அதன்பின் சஞ்சு சாம்சன் 17 ரன்னிலும், ஹெட்மயர் 8 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இந்த சீசனில் மூன்றாவது அரை சதத்தை நிறைவு செய்த ஜெய்ஸ்வால், 77 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 43 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் இந்த ரன்னை எடுத்திருந்தார்.

கடைசிகட்டத்தில் கெத்து காட்டிய துருவ் ஜூரல் 15 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார். தேவ்தத் படிக்கல் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள், அஷ்வின் ஆட்டமிழக்காமல் ஒரு ரன் எடுக்க, ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்- துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்கள் அணி அசத்தல்..!

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது....

3-வது ஒரு நாள் போட்டி : இந்திய அணிக்கு 353 ஓட்டங்கள் இலக்கு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு...

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாக கொண்ட இலங்கையின் பணவீக்கம் செப்டெம்பர்...

5 புதிய பதில் அமைச்சர்கள் நியமனம்

  ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புகள் 5 புதிய பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.   ஜனாதிபதி...