தமிழர்கள் மீதும், தமிழ்த்தாய் மீதும் அண்ணாமலைக்கு அக்கறை இல்லை

Date:

அண்ணாமலை, தமிழர்கள் மீதும், தமிழ் தாய் வாழ்த்து மீதும் அக்கறை கொண்ட நபர் இல்லை என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் பிரெண்ட்ஸ் பெடரேஷன் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் குற்றச் செயல்களைத் தடுக்கவும், கண்காணிக்கவும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 100 சிசிடிவி கேமராக்கள் அர்ப்பணிக்கும் நிகழ்வு தனியார் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி, திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் 100 சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் அமீர், ‘நடந்து முடிந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் மாற்றம் வேண்டும் என்பதற்காக நடந்துள்ளது. இந்தத் தேர்தலும் சாதாரண பொதுத் தேர்தல் போல மாறிவிட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து வெறுப்பு பேச்சுகளை பேசுபவர்கள் மீது அரசு வழக்கு தொடர வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தினர் மீது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தவறான கருத்துக்களை பலரும் பேசி வருகின்றனர்.

இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு. தேசிய கட்சியின் ஆதரவோடு சிலர் தவறான கருத்துக்களை பேசி வருகின்றனர். இத்தகைய செயலை தான் பாசிசம் என்று குறிப்பிட்டேன். அண்ணாமலை தமிழர்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் கிடையாது. ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று சொல்லிவிட்டு, சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அவர் எந்த காலத்திலும் தமிழர்கள் மீதும், தமிழ்த்தாய் வாழ்த்து மீதும் அக்கறை கொண்டவராக என்னால் பார்க்க முடியவில்லை. புர்கா, பர்ஹானா போன்ற திரைப்படங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். எல்லா படங்களுக்கும் தடை கேட்டுக் கொண்டே இருக்க முடியாது’ என்று தெரிவித்தார்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...