தந்தை கண் முன்னே ரஷ்ய இளைஞரை கபளீகரம் செய்த சுறா

Date:

சுற்றுலா சென்றிருந்த ரஷ்ய இளைஞர் ஒருவரை அவரது தந்தையின் கண் முன்னே கபளீகரம் செய்த சுறா மீனை அதிகாரிகள் பிடித்துள்ளார்கள்.

ரஷ்யாவிலிருந்தால் உக்ரைனுடன் போருக்குச் செல்ல நேரிடலாம் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காகவோ என்னவோ எகிப்துக்கு தன் தந்தையுடன் சுற்றுலா சென்றுள்ளார் விளாடிமிர் (Vladimir Popov, 23) என்ற இளைஞர்.

ஆனால், Hurghada என்னுமிடத்தில் கடற்கரைக்குச் சென்றிருந்த விளாடிமிர் கடலில் நீந்திக்கொண்டிருக்க, அவரது தந்தை கரையிலிருந்தவண்ணம் அவரைக் கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது திடீரென அங்கு வந்த ஒரு சுறா, விளாடிமிரைத் தாக்கத் துவங்கியுள்ளது. சுற்றுலாப்பயணிகள் அலறி சத்தமிட, தந்தையின் கண் முன்னேயே விளாடிமிரை கபளீகரம் செய்துவிட்டது அந்த சுறா.

இந்நிலையில், விளாடிமிரைக் கொன்ற சுறாமீனை அதிகாரிகள் பிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள். அது ஒரு புலிச் சுறா என அவர்கள் கூறியுள்ளார்கள்.

அந்த சுறா மீனை மீனவர்கள் பிடித்து கரைக்குக் கொண்டுவரும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

அந்த சுறா இதற்குமுன் வேறு யாரையாவது கொன்றுள்ளதா என்பதை அறியும் ஆராய்ச்சியில் அறிவியலாளர்கள் இறங்கியுள்ளார்கள்.

 

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற...