பேருந்து விபத்தில் ஆறு மாத குழந்தை பலி

Date:

கண்டி – மஹியங்கனை வீதியில் குருலுபொத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்ததுடன், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு (09) கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் பிரேக் செயலிழந்து மண்மேடு ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பிபில பிரதேசத்தை சேர்ந்த 06 மாத குழந்தையே உயிரிழந்துள்ளது.

விபத்தில் சாரதி உட்பட ஏழு ஆண்களும், பத்து பெண்களும், மூன்று சிறுவர்களும் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாத்திரை சென்று வீடு திரும்பி கொண்டிருந்த போதே பேருந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...