எதிா்கட்சி தலைவரை சந்தித்த ADB பணிப்பாளர்

Date:

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா(Kenichi Yokoyama) உள்ளிட்ட குழுவினர் நேற்று (09) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கை தற்போது முகம்கொடுத்து வரும் நிலைமைகள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, இலங்கையைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான ஒத்துழைப்பை நல்குமாறு எதிர்க்கட்சித் தலைவர், தூதுக்குழுவிடம் கோரிக்கை விடுத்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வதிவிட தூதுக்குழுப் பணிப்பாளர்களான சென் சென் (Chen Chen),தகாபுமி கடோணே(Takafumi kadono)ஆகிய பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

வீழ்ச்சி கண்டுள்ள துறைகள் குறித்து தனித் தனியாக விளக்கமளித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நிலையில் இருந்து இலங்கை மீள்வதற்கு கால அவகாசம் தேவை என்றும், முறையான நிதி முகாமைத்துவம் சார்ந்து அரசாங்கத்தை ஊக்குவித்தல் மற்றும் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி பல்வேறு துறைகளை இலக்காகக் கொண்டு இலங்கைக்கு ஒத்துழைப்பை நல்க எதிர்பார்பதாகவும் பிரதிநிதிகள் குழுவினர், எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....