பொரளையில் அதிரடி சோதனை !

Date:

கொழும்பு – பொரளை பகுதியில் காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய விசேட கூட்டு சோதனை நடவடிக்கையில் குறைந்தது 35 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களும், ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு பேரும், கஞ்சாவுடன் ஆறு சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், 2 வாள்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களும், பிடியாணை நிலுவையில் உள்ள இரண்டு சந்தேக நபர்களும், மேலும் 19 சந்தேக நபர்களும் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில்,ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து ஹெரோயின் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக கருதப்படும் 26 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட ஒருவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டியதாக கருதப்படும் 215,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (12) புதுக்கடை மற்றும் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மனைவி கொலை கணவருக்கு மரண தண்டனை !

எட்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை...

ஹசரங்கவுக்கு பதில் துஷான் ஹேமந்த

வனிந்து ஹசரங்க காயத்தில் இருந்து மீண்டு வருவதால் ஐசிசி கிரிக்கெட் உலகக்...

உக்ரைன் தாக்குதலில் ரஷிய கடற்படை தளபதி கொல்லப்பட்டாரா? பரபரப்பு தகவல்கள்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கி 1½ ஆண்டுகளை தாண்டிவிட்டது. ஆனாலும்...

இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70) மீது ஊழல் குற்றச்சாட்டு...