பாகிஸ்தான் வங்குரோத்து அடையாது – இஷாக் டார்

Date:

பாகிஸ்தானுக்கான கடன் தடைப்பட்டமைக்கு உலக அரசியல் பின்னால் இருப்பதாக அந்த நாட்டின் நிதியமைச்சர் இஷாக் டார் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இலங்கையைப் போல பாகிஸ்தான் கடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று உலகளாவிய நிறுவனங்கள் விரும்புகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி தொடர்பான செனட்டின் நிலைக்குழு முன் சாட்சியமளித்த இஷாக் டார், சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புப் பொதி இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாடு தனது கடமைகளை நிறைவேற்றும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஒன்பதாவது மறுஆய்வுக்குப் பின்னர், தேவையற்ற கடன் தாமதத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தால் எந்தக் காரணமும் கூறப்படவில்லை.

எனினும், சர்வதேச நாணய நிதியம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பாகிஸ்தான் வங்குரோத்து அடையாது என்று இஷார் டார் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 6 பில்லியன் உத்தரவாதத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கை நியாயமற்றது என்றும், நிதியத்தின் தாமதத் திட்டம் ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...