புதிய மின்கட்டண திருத்தம் தொடர்பில் சிக்கல்!

Date:

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய மின்சார கட்டணத் திருத்தத்திற்கு, குறித்த காலத்திற்குள் அனுமதி வழங்கப்படாவிட்டால், தற்போதைய மின்சாரக் கட்டணத்தை தொடர்ச்சியாக அமுல்படுத்த வேண்டியிருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

சபையின் தலைவர் பதவி இன்னும் வெற்றிடமாக இருப்பதால், மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு தீர்மானம் எடுக்க முடியாது என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த காலத்திற்குள் புதிய கட்டணங்கள் தொடர்பான யோசனைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கினால் மாத்திரம் ஜூலை முதலாம் திகதி முதல் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என மின்சார சபை தலைவர் நளிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...