இலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

Date:

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான 16 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் ஷஹீன் ஷா அப்ரிடி டெஸ்ட் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய வீரர்களான முகமது ஹரேய்ரா மற்றும் ஆமர் ஜமால் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் காலியில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்த ஷஹீன் அப்ரிடி டெஸ்ட் அணிக்கு அழைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இப்போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜூலை  9 ஆம் திகதி இலங்கை வர உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....