தமன்னாவின் ‘தாராள’ நடிப்பு ரஜினிகாந்த், சிரஞ்சீவி ரசிகர்கள் அதிர்ச்சி

Date:

சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகவே நடிகை தமன்னா பற்றிய பேச்சுக்கள்தான் அதிகமாக உள்ளது. ‘ஜீ கர்தா’ என்ற வெப் தொடரில் தமன்னா மிகவும் தாராளமாக நடித்திருக்கிறார். படுக்கையறை காட்சி, மிக மிக நெருக்கமான காட்சி, உடல் அசைவுகள் என அவர் நடித்துள்ள காட்சிகளின் வீடியோக்கள், ஸ்க்ரீன்ஷாட்டுகள் ஆகியவை சமூக வலைத்தளங்களிலும், வாட்சப்களிலும் பரவி வருகின்றன. அவற்றைப் பார்த்த பல ரசிகர்கள் தமன்னாவின் தாராள நடிப்பைப் பார்த்து அதிர்ச்சியடைந்து வருகிறார்கள்.

குறிப்பாக, ரஜினி ரசிகர்களுக்கும், சிரஞ்சீவி ரசிகர்களுக்கும் அது அதிக அதிர்ச்சியைத் தந்துள்ளது. தமன்னா தற்போது தமிழில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ‘போலா சங்கர்’ படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்தும், தெலுங்கில் சிரஞ்சீவியும் அதிக ரசிகர்களை வைத்துள்ள நடிகர்கள். அவர்களது படங்களை குடும்பத்துடன் வந்து பார்ப்பவர்கள் அதிகம். அந்தப் படங்களில் தமன்னா தான் கதாநாயகி.

ஆபாசமான விதத்தில் வெப் தொடரில் நடித்துள்ளதால் தமன்னாவின் இமேஜ் தற்போது தள்ளாடி வருகிறது. அது ‘ஜெயிலர்’ படத்திற்கும் ‘போலா சங்கர்’ படத்திற்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அடுத்த வாரம் தமன்னா நடித்துள்ள மற்றொரு தொடரான ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வேறு வர உள்ளது. அதிலும், ஆபாசமாகத்தான் நடித்துள்ளார் என்று தகவல். முத்தக் காட்சிகளுக்குக் கூட இத்தனை வருடங்களாகத் தடை சொன்ன தமன்னா திடீரென இப்படி மாறி நடிப்பதன் காரணம் பலருக்கும் புரியவில்லை.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...