சுற்றுலா விசாவில் வந்து இலங்கையில் வணிகம் செய்யும் வெளிநாட்டவர்கள்?

Date:

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வரும் அதிகமான வெளிநாட்டவர்கள், இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்குக் கரையோரங்களில், உள்நாட்டு வரி வலைக்கு அப்பால், சுதந்திரமாக தமது வணிக செயற்பாடுகளில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்களுடனான செய்தியை இன்றைய ஆங்கில செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ளது.

இது இலங்கைக்கு சுற்றுலா மூலம் அதிக வருவாய் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், மறுபுறத்தில் வரியினால் கிடைக்கும் நன்மைகளை தவிர்க்கச் செய்துள்ளது.

அத்துடன் உள்ளூர்வாசிகளின் வணிகளுக்கு பாரிய நட்டங்களையும் ஏற்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் உணவகங்கள், விருந்தினர் விடுதிகள், யோகா முகாம்கள் போன்ற பல்வேறு வணிகங்களை நடத்தி வருகின்றனர்.

அறுகம்பே, அஹங்கம, உனவடுன, வெலிகம, மிரிஸ்ஸ போன்ற இடங்களில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தநிலையில் குறித்த பகுதிகளில் உரிமம் பெற்ற வணிகங்களை நடத்தும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள், சுற்றுலாப் பயணிகளின் இந்த செயற்பாடுகளை சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...