கட்டணமின்றி உணவு தரும் திருமலை பெண்ணின் கருணை மனம்

Date:

பணமின்றி பசி என்று வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் மகத்தான பணியை முன்னெடுத்து வரும் திருகோணமலை பெண் ஒருவரின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

லோகவர்த்தினி என்ற இளம் பெண்ணே இந்த செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறார்

ஒருசமயம் தனது கடைக்கு அருகில் இளைஞர் ஒருவர் நீண்ட நேரம் காத்திருந்ததை ஏன் என்று கேட்டபோது போதிய பணம் இன்மையால் உணவு வாங்க வசதியில்லை என்றும் சரியான பசியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த நிலையில் லோகவர்தினி அவருக்கு உணவு வழங்கியுள்ளார். இதனையடுத்து பசி என்று வருபவருக்கு தனது கடையில் உணவு உண்டு என பதாகை ஒன்றை அவர் எழுதி வைத்துள்ளார். சிங்கள மொழியிலும் இவர் அவ்வாறு பதாகை வைத்துள்ளமை சிறப்பம்சமாகும்.

தனது கடைக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், யாசகர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.

இலவசம் என்று பொறுப்பின்றி செயற்படாமல் இயற்கையான முறையில் தயாரித்த உணவுகளை இவர் வழங்கி வருகிறார்.இவரின் செயற்பாட்டுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷான்[ Nissan ] கார் நிறுவனத்தின் புதிய தீர்மானம்

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான நிஷான், மின்சார கார் உற்பத்தியை...

மனைவி கொலை கணவருக்கு மரண தண்டனை !

எட்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை...

ஹசரங்கவுக்கு பதில் துஷான் ஹேமந்த

வனிந்து ஹசரங்க காயத்தில் இருந்து மீண்டு வருவதால் ஐசிசி கிரிக்கெட் உலகக்...

உக்ரைன் தாக்குதலில் ரஷிய கடற்படை தளபதி கொல்லப்பட்டாரா? பரபரப்பு தகவல்கள்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கி 1½ ஆண்டுகளை தாண்டிவிட்டது. ஆனாலும்...