விலை அதிகரிப்புக்கு நுகர்வோர் அதிகார சபையின் அனுமதி கட்டாயம்

Date:

உள்நாட்டு கோதுமை மா நிறுவனங்கள் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையை அதிகரிக்குமாயின் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியைப் பெற வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (18) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அமைச்சர், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை 10 ரூபாவினால் விரைவில் குறைக்க வேண்டும்.

எவ்வாறாயினும், பேக்கரி பொருட்களுக்கு தேவையான ஏனைய பொருட்களின் விலையை ஒப்பிடும் போது குறையாத காரணத்தினால் தமது உற்பத்திகளின் விலைகளை குறைப்பது சிக்கலாக உள்ளதாக அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதேவேளை, கோதுமை மா பொருட்களின் விலைகளுக்கும் கட்டுப்பாட்டு விலை தேவை என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவுக்கு மாத்திரமல்ல அனைத்து பேக்கரி பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலை அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அவ்வாறான விலை நிர்ணயம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதிகபட்ச ஆதரவை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....