கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டில் உள்நாட்டுக் கடனில் எந்தவிதமான குறைப்பும் இருக்காது!

Date:

முன்மொழியப்பட்ட உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டில் உள்நாட்டுக் கடனில் எந்தவிதமான குறைப்பும் இருக்காது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு காரணமாக ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதிப் பயனாளிகள் அல்லது ஓய்வூதிய நிதிகளுக்கு எந்த அநீதியும் ஏற்படாது என்றும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடாளுமன்றத்தில் இந்த உறுதியை அளித்துள்ளார்.

உத்தேசித்துள்ளபடி உள்நாட்டுக் கடனை மறுசீரமைத்தால் நாடு பாரிய பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் உள்நாட்டுக் கடனைக் குறைக்க அரசாங்கம் உடன்பட்டிருந்தால், இந்த விடயத்தை மீண்டும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேட்டுக்கொண்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....