அலிபாபா நிறுவனத்தில் அதிரடி மாற்றம்

Date:

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் அங்கு பொருளாதாரம் மந்த நிலை நிலவுகின்றது.

இதன் காரணமாக சீனாவின் முக்கிய மின்னணு வர்த்தக நிறுவனமான அலிபாபாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அலிபாபா நிறுவனமானது அங்கு பல துறைகளிலும் செயற்பாடுகிளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்தநிலையில் நிறுவனத்தின் வளர்ச்சியை தூண்டும் வகையில் ஒரு பெரிய நிர்வாக மறுசீரமைப்பை அலிபாபா மேற்கொண்டுள்ளது.

அதாவது மின்னணு வர்த்தக குழுமத்தின் தலைவராக உள்ள எடி வூ தலைமை நிர்வாக அதிகாரியாகவும், தற்போது தலைவராக உள்ள டேனியல் ஜாங் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நிர்வாக துணைத்தலைவரான ஜோசப் சாய் அலிபாபா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.

தாய்வானில் பிறந்த இவர் அலிபாபா நிறுவனம் உருவானதுக்கு முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...