எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும் அமைச்சு பதவிகளை வழங்க ஜனாதிபதி முயற்சி

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சிகளுக்கும் இடையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வருகின்றன.

உரியமுறையில் செயற்படத் தவறிய, சில முக்கிய அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாற்றியமைப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுகாதார அமைச்சு மற்றும் ஊடகத்துறை அமைச்சு என்பன இதில் அடங்குவதாக அரசாங்கத்தரப்பு தகவல் ஒன்று கூறுகிறது.

முன்னதாக ஜனாதிபதிக்கும், பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினருக்கும் இடையிலான அண்மைய சந்திப்புகளில், புதிய பதவிகளை பொதுஜன பெரமுன கோரியுள்ளது.

எவ்வாறாயினும் தற்போதுள்ள நெருக்கடிகள் மற்றும் பொருளாதார இன்னல்களுக்கு மத்தியில் செயற்படக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப் பதவிகளை ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....